கும்மிடிப்பூண்டி அருகே 06 பேருக்கு அரிவாள் வெட்டு; போலீசார் விசாரணை ..!
Seithipunal Tamil January 13, 2025 01:48 PM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த அரி என்பவர் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது தேவராஜ் என்பவரின் தலைமையில் சிலர் அரியை வழிமறித்து அவரது செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நடந்த மோதலில் தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அரியை அரிவாளால் வெட்டியுள்ளனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அரியின் உறவினர்களையும், தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 06 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.