மனைவிகள் ஒரு பக்கம் இருந்தாலும் காதலிக்காக எம்.ஆர்.ராதா பண்ண ஒரு விஷயம்..
CineReporters Tamil January 13, 2025 04:48 PM

சினிமாவில் ஒரு சகாப்தம்: தமிழ் சினிமாவில் எம் ஆர் ராதா ஒரு தனி சகாப்தம் என்றே சொல்லலாம். அவர் சினிமாவில் இருந்த வரைக்கும் ஒரு தனி அடையாளமாக திகழ்ந்தார். எண்ணற்ற நாடகங்கள் ,நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், புல்லரிக்கும் வசனங்கள் என தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்தார் என்றே சொல்லலாம். அவருடைய கருத்துக்களில் பெரும்பாலும் திராவிடம் நிறைந்த கருத்துக்களாக இருக்கும்.

சொந்தவாழ்க்கை சுவாரஸ்யம்: பெரியார் மீது அதிக அளவு பற்று கொண்டவர். மூடநம்பிக்கைகள் மீது நம்பிக்கையில்லாதவர். அதை தன் படங்களில் நிறையவே வெளிப்படுத்தி இருக்கிறார். கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது, நாள் நட்சத்திரம் பார்ப்பது என இந்த மாதிரி விஷயங்கள் மனிதர்களை முட்டாள் ஆக்குகிறது என்பதை பல படங்களில் எடுத்துரைக்கிறார் எம் ஆர் ராதா. அவருடைய சினிமா வாழ்க்கையை விட சொந்த வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது.

பேரன் சொன்ன விஷயம்: சில சமயங்களில் அவருக்கு மூன்று மனைவிகள் என கூறுகின்றனர். சில சமயங்களில் ஐந்து மனைவிகள் இருந்தனர் என்றும் செய்திகள் உள்ளன. எந்தெந்த ஊர்களில் நாடகங்கள் நடத்துகிறாரோ அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வது அவருடைய வழக்கமாக இருந்தது. இதைப்பற்றி அவருடைய பேரனும் நடிகருமான வாசு விக்ரம் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் .

விட்டுப் போற பழக்கம் இல்லை: எந்த பெண்ணை தொட்டாலும் மனைவி என்ற அந்தஸ்தை என் தாத்தா கொடுத்து விடுவார். மற்ற நடிகர்களைப் போல பாதியிலேயே விட்டுப் போற பழக்கம் என் தாத்தாவிற்கு கிடையாது. ஒரு பெண்ணை தொட்டுவிட்டால் அவருக்கு 100 சவரன் நகை, ஒரு பங்களா, ஒரு கார், 20 கறவை மாடுகள், 50 ஏக்கர் நிலம் என சொத்துக்கள் பிரித்து கொடுக்கப்பட்டு விடும்.

அதேபோல எத்தனை பாட்டிகள் இருந்தார்களோ அத்தனை பேருக்கும் தனித்தனியாக சொத்துக்களை பிரித்து வைத்துவிட்டு தான் போனார் என் தாத்தா. கோவையில் ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருந்த பொழுது அங்கு பிரேமா பெத்தா என்ற ஒரு பெண்ணை காதலித்தார். அவருக்கு ஒரு மணிமண்டபமே கட்டினார் என்னுடைய தாத்தா. சிறிய அளவில் தான். ஆனால் அவருடைய நினைவாக அந்த மண்டபத்தை கட்டினார் .

அப்போது ஜிடி நாயுடு என் தாத்தாவிடம் ஒரு பொம்பளைக்கு போய் மணி மண்டபத்தை கட்டுகிறாயே என்று கேட்டதற்கு என் தாத்தா மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டியது முட்டாள்தனம் என்றால் நானும் ஒரு முட்டாள் தான் எனக் கூறி அதற்கான பதிலை கொடுத்துவிட்டு சென்றார் என வாசு விக்ரம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.