நடிகர் ராணா டகுபதி மீது வழக்குப்பதிவு.. போலீசார் விசாரணை!
Dinamaalai January 13, 2025 09:48 PM


பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஹைதராபாத்தில் பிலிம் நகரில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை நந்தகுமார் என்பவருக்கு நடிகர் ராணா குடும்பத்தினர் குத்தகைக்கு விட்டிருந்தனர். அந்த இடத்தில் நந்தா டெக்கான் கிச்சன் என்ற ஹோட்டலை நந்தகுமார் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் நடிகர் ராணா டகுபதி குடும்பத்தாருக்கும் நந்தகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருக்கு குத்தகைக்கு விட்ட நிலத்தை, நடிகர் ராணா குடும்பத்தினர் திரும்பி கேட்டதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தில் இருந்த நந்தகுமாருக்கு சொந்தமான ஹோட்டலை ராணா குடும்பத்தினர் சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியுள்ளனர். இதனால் தனக்கு ரூ. 20கோடி வரையிலும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நந்தகுமார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். 

இந்த புகார் மனுவின் அடிப்படையில் ஹைதராபாத் காவல்துறையினர் நடிகர் ராணா மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராணா மற்றும் நந்தகுமாருக்கு இந்த குத்தகை ஹோட்டல் தொடர்பான பிரச்சினை கடந்த சில மாதங்களாகவே நீடித்த நிலையில் ராணாவின் இந்த செயல் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.