இந்திய பாராளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மைத் துறை அமைச்சர் கிரண் ரிஜு மற்றும் சவுதி அரேபியா வின் ஹஜ் துறை அமைச்சர் தஃபிக் பின் ஃபாஸ்வான் அல் ரபையா வுடன்் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவுக்கான ஹஜ் பயணிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன்படி 2025ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 ஹஜ் பயணிகள் இந்தியாவிலிருந்து புனித யாத்திரைக்கு செல்ல உள்ளனர்.இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி வரவேற்பு தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய அரசு ஹஜ் பயணிகளின் புனித யாத்திரை சிறப்பாக அமைய உறுதியேற்றுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.