தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்... கடந்த சில தினங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் தான் சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாகவும், அப்படி செய்பவர்களை லிஸ்ட் எடுத்து அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஹனிரோஸ் எச்சரித்திருந்தார்.
பிறகு அவர் சொன்னபடியே, எர்ணாகுளம் சென்ட்ரல் போலீசில் 30 நபர்கள் மீது புகார் அளித்தார். இந்த 30 பேர் ஹனி ரோஸ் குறித்து ஆபாசமான போட்டோக்களை சித்தரித்து வெளியிட்டு, மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனராம். அத்துடன், வசதி படைத்த ஒரு நபர் தன்னை சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருவதாகவும் கூறி அவர் மீதும் புகார் அளித்திருந்தார் ஹனிரோஸ்.. ஆனால், அந்த நபரின் பெயரை ஹனிரோஸ் வெளியிடவில்லை.இதன்பிறகுதான், அந்த வசதி படைத்த நபர், கேரளாவில் புகழ்பெற்ற செம்மனூர் ஜுவல்லரி நகை கடைக்கு சொந்தக்காரரான பாபி செம்மனூர் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்நபரை ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது செய்தது..
இந்நிலையில் நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் கைதான பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு ஜாமின் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம்.