Breaking: குறுக்கே புகுந்த நாய்… பயங்கர விபத்து… கர்நாடக மாநில அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி…!!!
SeithiSolai Tamil January 14, 2025 07:48 PM

கர்நாடக மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஹெப்பால்கர். இவர் இன்றைய காலை 5 மணியளவில் தன்னுடைய சகோதரர் சன்னராஜ் என்பவர் உடன் காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் கிட்டோர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே புகுந்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த ஒரு மரத்தின் மீது மோதியது. இதில் முன்பக்கம் கடுமையாக சேதம் அடைந்த நிலையில் அமைச்சர் மற்றும் அவருடைய சகோதரருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.