தமிழ் மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!
Dinamaalai January 14, 2025 06:48 PM


உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை  உலகம் முழுவதும் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதலே புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு சூரியனை வழிபட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர்.


இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தமிழ் மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.