Bigg Boss Tamil Season 8 : அப்படி சொல்றத நிப்பாட்டுங்க.. ஆதரவாக இருந்த ரவீந்தரையே பகிரங்கமாக எச்சரித்த முத்து..
Tamil Minutes January 14, 2025 06:48 PM

பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது எலிமினேட்டான போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கிய சமயத்தில் சிலர் வரும் போது அதிகம் உற்சாகமான விஷயங்களும் அதே நேரத்தில் வேறு சில போட்டியாளர்கள் வரும் போது பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் ஃபேட்மேன் ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, சுனிதா, வர்ஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்த போது அவர்களில் ஒரு சிலர் சவுந்தர்யா உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்களை டார்கெட் செய்து தங்கள் விளையாட்டை நகர்த்தி இருந்தனர்.

சௌந்தர்யா ஒன்றுமே செய்யாமல் பிக் பாஸ் வீட்டில் பெயர் எடுத்ததாக சுனிதா கூற, அதற்கு தகுந்த பதிலையும் அவர் கொடுத்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் தொடர்ந்து மற்ற சில எக்ஸ் போட்டியாளர்களும் சவுந்தர்யா விளையாடாமலேயே பிஆர் மூலம் இதுவரை வந்து விட்டார் என கூறும் போது அவர் கண்ணீர் வடித்திருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அன்ஸிதாவின் என்ட்ரி

ஆனால் அதே நேரத்தில் வேறு சில எக்ஸ் போட்டியாளர்கள் வரும்போது பிக் பாஸ் வீட்டில் பலர் உற்சாகமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சத்யா மற்றும் ஜெஃப்ரி என ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களை அர்னவ் அதிகமாக விமர்சித்திருந்தார். அவர்கள் இருவரும் வருகை தந்து அர்னவிற்கு தகுந்த பதிலடியை கொடுத்திருந்தனர்.

இப்படியாக பிக் பாஸ் வீடு களைகட்டிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அன்சிதா என்ட்ரி கொடுத்திருந்தார். இவரும் இறுதி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களாக இருந்தும் பாதியில் வெளியேறியிருந்தார். இதற்கிடையே வந்த வேகத்தில் இந்த வீட்டில் ஒருவரை கட்டி அணைக்க வேண்டும் என்று கூறிய அன்ஸிதா, சவுந்தர்யாவை கட்டித்தழுவி தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இதே போல முத்துக்குமரனை பார்த்து பேசும் அன்ஸிதா, உனக்கு இந்த வீட்டுக்குள்ளேயே ஒரு பிஆர் டீம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்.

வெளிய இனிமே சொல்லாதீங்க

அதாவது ஃபேட்மேன் ரவீந்தர், வர்ஷினி, ரியா உள்ளிட்ட பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னர் முத்துக்குமரனுக்கு வெளியே இருக்கும் ஆதரவு பற்றியும் அவர் டைட்டில் வின்னர் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அனைவரும் கூறுகின்றனர். அதிலும் ஃபேட்மேன் ரவீந்தர் ஒரு படி மேலே போய் முத்துக்குமரனுக்கு ஆதரவு கொடுக்க, மற்ற அனைத்து போட்டியாளர்களை எதிர்க்கும் திட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இதற்கு மத்தியில் அன்ஸிதாவும் இப்படி பேசியதால் கடுப்பான முத்து, ஃபேட்மேன் ரவீந்தரிடம், “இந்த வீட்டில் இருந்து போவது வரைக்கும் நான் ஜெயிக்க வேண்டும் என்று உங்கள் மனதில் இருப்பதை வெளியே சொல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கும் வகையில் தெரிவித்து விடுகிறார். இதனால் ரவீந்தரின் முகமும் மாறி விடுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.