அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று ஜனவரி 13ம் தேதி ஒரே நாளில் 27 காசுகள் சரிந்து ரூ.86. 31 காசுகளாக வணிகமாகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.86ஆக முடிந்திருந்த நிலையில், இன்றைய வணிக நேரத் தொடக்கத்திலும் நீடித்து கடுமையான சரிவைச் சந்தித்தது.
பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
அந்நியச் செலாவணியில் வங்கிகளுக்கு இடையிலான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து, மார்ச் மாதத்தில் ரூ.87யை எட்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
!