அரசியலமைப்பு பற்றி ஆளுநர் ஆர் என்ற ரவி அவர்களுக்கு பேச எந்த தகுதியும் இல்லை என்று திமுக எம்பி வில்சன் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் பதிவில் 52 ஆண்டுகளாக தேசிய கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தேச பக்தி குறித்து சொற்பொழிவு ஆற்றுவது வேடிக்கையாக இருப்பதாகவும் இந்தியாவையும் தமிழகத்தையும் இரண்டு கண்கள் போன்று சமமானவை என்றும் ஒருவரை சந்தோஷப்படுத்த மற்றவரை நாங்கள் காயப்படுத்தியதில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதோடு அரசியலமைப்பின் கண்ணியத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அந்த அரசியலமைப்பை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.