2025 ஆம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு அதிக தொகை கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 02வது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். சென்ற வருடம் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்றதோடு 04 இதர கோப்பைகளை வென்றுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.