10 ரூபாய்க்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை சரமாரியாக தாக்கிய பஸ் கண்டக்டர்..!
Seithipunal Tamil January 13, 2025 10:48 AM

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் கண்டக்டர் இடையே நடந்த 10 ரூபாய்க்கான மோதல் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஆக்ரா சாலை வழியாக சென்ற பேருந்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.எல்.மீனா பயணம் செய்து கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகனோடா பேருந்து நிலையத்தில் இறங்குவதற்காக டிக்கெட் பெற்றுள்ளார். ஆனால் அவர் இறங்க வேண்டிய நிறுத்தத்தை தவறவிட்டதால், அடுத்த நிறுத்தமான நய்லா என்ற இடத்தில் ஆர்.எல்.மீனா இறங்க முயன்றுள்ளார். 

அப்போது ஆர்.எல்.மீனாவிடம் பேருந்தின் கண்டக்டர் கன்ஷ்யாம் சர்மா கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்த தெரிவித்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.எல்.மீனாவை கண்டக்டர் கன்ஷ்யாம் சர்மா சரமாரியாக தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து ஆர்.எல்.மீனா கனோடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.