ஆளும் திமுக அரசுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்த நிலையில், தற்போது விமர்சனத்தை நிறுத்திவிட்டு, முழு நேரமும் தங்களது ஆதரவை கொடுக்க தொடங்கியுள்ளன.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் தொடர்ந்து திமுக மீது விமர்சனத்தை குறைக்காமல் தெரிவித்துக் கொண்டே இருக்கிறது.
தற்போது அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் பொறுப்பேற்றுள்ள சண்முகம், அடுத்தடுத்து செய்தி ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
குறிப்பாக, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய சண்முகம், 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக அவர்களே சொல்லிக்கொண்டு, மீதம் உள்ள ஒரு வருடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பதாக, வஞ்சப்புகழ்ச்சியில் வச்சு செய்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை அதிமுகவின் ஐடி விங்க் பக்கத்திலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜம் இந்த காணொளிகளை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பகிர்ந்து உள்ளனர்.