மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் (திங்கட்கிழமை) அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கி, (14-ந் தேதி) அதிகாலை 4.46 மணிக்கு மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு கிரிவலப்பாதையில் தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிரிவலப்பாதையில் பெரும்பாலான பகுதிகள் குப்பைகள் இன்றி தூய்மையாக காணப்படுகிறது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் கிரிவலம்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.