இளைஞர்களின் சக்தி இந்தியாவை விரைவில் வளர்ந்த நாடாக மாற்றும் என்பதில் நம்பிக்கை உள்ளது; பிரதமர் மோடி..!
Seithipunal Tamil January 13, 2025 10:48 AM

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடந்த வளர்ந்த இந்தியாவின் இளைய தலைவர்கள் மாநாடு நடந்தது.

பிரதமர் மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். அத்துடன், அங்கு நடந்த கண்காட்சி, கலாசார நிகழ்வுகளில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதில், இன்று உலக நாடுகள் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்ந்து போற்றி வருகின்றன.

நாட்டின் இளைஞர்கள் மீது அவர் பெரிய நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் எப்போதும், இளைய தலைமுறை, புதிய தலைமுறை மீது நம்பிக்கை உள்ளது என கூறுவார். எனது ஊழியர்கள் இளைய தலைமுறையில் இருந்து வந்தவர்கள் என்பார். அவரைப்போல் நானும், உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். விவேகானந்தர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன செய்தாரோ, என்ன நினைத்தாரோ அதன் மீது எனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது.

எனது பாரதம் என்பது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒரு முயற்சியாகும். இது சமூக இயக்கம், கல்வி சமத்துவம் மற்றும் நடைமுறை திறன்கள் மூலம் இந்திய இளைஞர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளைஞர்களின் ஆற்றல் அரங்கம் முழுவதும் உணரக்கூடியதாகவும் உள்ளது.

அனைத்து பிரச்சனைகளுக்கும் இளம் தலைமுறையினர் தீர்வு காண்பார்கள் என விவேகானந்தர் கூறினார். அதில் முற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்தியாவை வளர்ந்த நாடாக இளைஞர் சக்தி மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. தகவல்களை மட்டும் கணக்கிடும் நபர்கள் அது சாத்தியம் இல்லை என நினைக்கலாம். நோக்கம் பெரியது. ஆனால் அது முடியாதது அல்ல.

இந்தியா முன்னேறிச் செல்ல பெரிய இலக்குகள் நிர்ணயிக்க வேண்டும். இன்று அதனை இந்தியா செய்து கொண்டுள்ளது என மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.