எது பொங்கல் 15ம் தேதியா? உளறி சிக்கிய முதல்வர் ஸ்டாலின் வீடியோ வைரல்!
Seithipunal Tamil January 13, 2025 07:48 AM

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் பல்வேறு சமயங்களில் உளறி சிக்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் காணக் கிடைக்கின்றன. 

குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்பட்ட காலத்தில் பழமொழிகளை மாற்றிப் பேசி.., அதாவது, "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்பதற்கு பதிலாக, "யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே" என்று மாற்றி சொல்லியதும், 

"மதில் மேல் பூனை" என்பதற்கு பதிலாக "பூனை மேல் மதில்" இன்று பழமொழியை மாற்றி சொன்ன காணொளிகள் அன்றைய காலகட்டத்தில் வைரலாக இருந்தன. மேலும், அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை பொன். ராதாகிருஷனுக்கு - பொன்னார் சங்கர் என்றும், வேலுமணிக்கு - வேலுமதி என்றும், எடப்பாடியருக்கு - வாழப்படியார் என்றும் உச்சரித்து பேசியதும் வைரலாகியது.

குடியரசு தினம், சுதந்திர தின தேதிகளை மாற்றி கோவூரிய காணொளி, குழந்தைக்கு பெயர் வைக்கும் போது குழந்தையின் தந்தை (ஷேக் அலாவுதீன்) பெயரை ஜெயக்கடா என்று கூறிய காணொளி எல்லாம் இன்று வரை நிலைத்து நிற்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

தற்போது முதலமைச்சராக ஆனபிறகு இதுபோல் பேசி வைரலாகாமல் இருந்து வந்த முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாளை ஜனவரி 13 போகிப் பண்டிகை, ஜனவரி 14 பொங்கல் பண்டிகை, 15 மாட்டுப் பொங்கல், 16 காணும் பொங்கல், திருவள்ளூர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் இந்த தேதிகளை மாற்றி தெரிவித்த காணொளி தான் அது.

அதாவது ஜனவரி 14-ம் தேதி தான் போகிப் பண்டிகை என்றும், 15ஆம் தேதி தான் பொங்கல் என்றும், 16 ஆம் தேதி தான் மாட்டுப் பொங்கல் என்றும், 17ஆம் தேதி தான் திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என்று அவர் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஒருவேளை எழுதிக் கொடுத்தவர்கள் மாற்றி எழுதிக் கொடுத்து விட்டார்களோ என்று நெட்டிசங்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.