தமிழ்சினிமா உலகின் இசை சாம்ராஜ்யம் என்றால் அது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான். 80ஸ், 90ஸ் குட்டீஸ்கள் மட்டும் அல்லாமல் 2கே கிட்ஸ்களுக்கும் இவரது இசை ரொம்பவே பிடித்துவிட்டது எனலாம். அந்தளவு இன்று வரை தமிழகம் முழுவதும் இசைக்கச்சேரி நடத்தி ரசிகர்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார். இவருக்கு இளையராஜா என்ற பெயர் எப்படி வந்ததுன்னு ரசிகை ஒருவர் கேட்க அதற்கு இப்படி பதில் அளித்துள்ளார்.
ராஜையா: எனக்கு அப்பா வச்சது ராஜையா, ஞானதேசிகன். என்னுடைய ஜாதகத்தைப் பார்த்துட்டு ஞானதேசிகன்னு வச்சாரு. எப்படியோ பின்னாடி இசைஞானி வந்து ஒட்டிக்கிச்சு. அது வேற. ஆனா ஸ்கூல்ல சேர்க்கும்போது ஷார்ட்டா இருக்கணும்னு சொல்லிட்டு ராஜையான்னு வச்சாரு.
தனராஜ் மாஸ்டர்: அது ராஜையா, ராஜையான்னு போய்க்கிட்டு இருந்தது. அப்புறம் ஆர்மோனியத்தை எடுத்துக்கிட்டு சென்னைக்கு வந்தேன். அப்போ தனராஜ் மாஸ்டர் வந்து வெஸ்டர்ன் மியூசிக். அந்தக் காலத்துல எம்எஸ்.விஸ்வநாதன், அவருக்கு முன்னால இருக்குற எஸ்.வி.வெங்கட்ராமன், சிஆர்.சுப்புராமன்னு பெரிய இசை அமைப்பாளர்களுடைய இசை கலைஞர்கள் எல்லாம் தனராஜ் மாஸ்டர்கிட்ட தான் டிரெய்னிங் எடுத்துட்டு வந்து சினிமாவல சேருவாங்க.
பஞ்சு அருணாச்சலம்: அவருக்கிட்ட போய் நான் கத்துக்க போகும்போது பேரு என்னன்னு கேட்டாரு. ராஜையான்னு சொன்னேன். ராஜையா நல்லா இல்ல. ராஜான்னு வச்சிக்கோன்னாரு. அவங்க அவங்க வர்றாங்க. மாத்துறாங்க. போயிட்டே இருந்தாங்க. அப்பறம் படம் சான்ஸ் கிடைச்ச உடனே பஞ்சு அருணாச்சலம் பாட்டெல்லாம் கம்போஸ் பண்ணியாச்சு. நான் கம்போஸ் பண்ணின சாங்குக்காக கதையை ரெடி பண்ணி அவர் வந்து அன்னக்கிளிங்கற படம் ரெடி பண்ணிருக்காரு.
பாடிக் காட்டுன ராஜையா: என்ன சாங் கம்போஸ் பண்ணிருக்கன்னு கேட்டாரு. அப்போ ஆர்மோனியம் கூட இல்ல. அவரு ஒரு லாட்ஜ்ல இருந்தாரு. அங்க இருக்குற டேபிள்ல தாளம் போட்டுப் பாடிக் காட்டுனேன். அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சானைப் பார்த்தீங்களா, சுத்தசம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்னு வரிசையா பாடிக் காட்டுனேன்.
வரப்பிரசாதம்: இந்தப் பாடல்களை யூஸ் பண்றதுக்காகவே பாடம் எடுத்தேன்னு அவர் சொன்னாரு. அன்னக்கிளி படத்தின் மூலமா உன்னை இசை அமைப்பாளர் ஆக்குறேன்னாரு. எனக்கு அதுக்கு முன்னாடி தான் ஒரு படம் வருது. இசை அமைப்பாளர் கோவர்த்தனோடு சேர்ந்துட்டு. அது வரப்பிரசாதம் என்ற படம்.
பஞ்சு அருணாசலம் 'ராஜான்னு ஏற்கனவே ஏஎம்.ராஜா இருக்காரு'. 'பாவலர் சகோதரர்கள்' போடலாம். 'அந்தப் பேருல தான் ஆர்கெஸ்ட்ரா பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ டிகேஎஸ் பிரதர்ஸ் மாதிரி பழசா இருக்கே'ன்னு சொன்னாரு.
அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறப்ப ராஜா. இன்னொரு ராஜா இருக்காரு. நீ இளையராஜான்னாரு. 'சரி நீங்க கூப்பிடுறதா இருந்தா கூப்பிடுங்க'ன்னு சொல்லிட்டேன். அப்படி வந்ததுதான் 'இளையராஜா'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.