என் மனைவியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்கும்! ஆனந்த் மஹிந்திரா அதிரடி!!
A1TamilNews January 13, 2025 05:48 AM

எல் அண்ட் டி தலைமை அதிகாரி சுப்ரமணியன் 90 மணி நேரம் உழைக்க வேண்டும், மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று கேட்டதற்கு சமூகத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்பட பல்வேறு பிரபலங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, எனக்கு என் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும். ஒருவர் முழு நேரமும் அலுவலகத்திலேயே இருந்தால் அவருடைய சிந்திக்கும் திறன் குறைந்து விடும். மனைவி, குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் போது உற்சாகத்துடன் அலுவலகத்திற்கு வருவார்கள். 90 மணி நேர்ம் 70 மணி நேரம் என்று ஒருவர் எவ்வளவு நேரம் உழைக்கிறார் என்பதை விட எவ்வளவு திறம்பட உழைக்கிறார், அதற்கான அவுட்புட் தருகிறார் என்பது தான் முக்கியம். 10 மணி நேரம் திறம்பட வேலை பார்த்தால் கூட ஒருவர் முழுமையான அவுட்புட் தரமுடியும் என்று கூறியுள்ளார்

இன்போசிஸ் நாராயண மூர்த்தி, எல் அண் டி சுப்ரமணியத்திற்கு எதிராக வெளிப்படையாகப் பேசியுள்ள ஆனந்த மஹிந்திராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.