தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.
தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமா அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.
சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்றுப்போட தலைவலி குணமாகும். திருநீற்றுப்பச்சை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி, அந்தச் சாறை நுகர்ந்தால் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.