பாசிப்பருப்பை கீரைகளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்னாகும் தெரியுமா?
Top Tamil News January 13, 2025 09:48 AM

பொதுவாக பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது.இந்த பருப்பின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. முலைகட்டிய பாசிப்பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
 2.அடுத்து பாசிப்பருப்பை அரைத்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும். தலைக்கு தேய்த்து குளித்து வருவதால் பொடுகு தொல்லை இருக்காது.
3.பாசிப்பருப்பை கீரைகளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் உடல் வெப்பம் சீராகும்.


4.இதனால் மூல நோய்கள் குணமாகும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
5.பயத்தம் பருப்பை சாப்பிடுவது  உங்கள் வயிற்றில் வாயுவின் உருவாக்கத்தை அனுமதிக்காது.
பயத்தம் பருப்பில் இரும்புச் சத்தும் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலிலும் இரத்த சிவப்பணுக்கள் உருவாகின்றன.
 6.பயத்தம் பருப்பில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை உங்கள் உடலில் சேர விடாது. இதனுடன், இதை உட்கொள்வதன் மூலம், மாரடைப்பு அபாயத்தையும் தவிர்க்கலாம்
7.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பயத்தம் பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். . எப்பொழுதெல்லாம் நீங்கள் பலவீனமாக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் பாசிப்பருப்பை சாப்பிட வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.