பெரியார் (ஈரோடு வெங்கடப்ப ராமசாமி) குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
பெரியார் குறித்த அவதூறாக பேசியதாக சீமான் மீது திமுக நேரடியாகவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதே போல் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், சீமானின் உருவ பொம்மையை எரிப்பது, சீமானுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்துவது போன்ற போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
மேலும், சீமானுக்கு எதிரான சுவரொட்டிகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு வரும் நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு கருத்து ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், "சீமான் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்க விரும்புபவர்கள் அவரது கட்சி அலுவலகத்தை முற்றிகையிடாமல், அவரது இல்லத்தை முற்றுகையிடுவதன் நோக்கம். அவர் வசிப்பது வாடகை வீடு என்பதால், அங்கே தொடர்ந்து காவல் துறை, போராட்டக்காரர்கள் என்று கூடினால், வீட்டை காலிசெய்ய சொல்வார்கள் என்பதால் தான்" என்று தெரிவித்துள்ளார்.
இது தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்த விவாதமும் காரசாரமாக நடந்து வருகிறது.