பிரபல செல்போன் ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடைய மனைவி லாரென் பாவெல் கும்பமேளாவை ஒட்டி இந்தியா வந்துள்ளார்.இந்நிலையில், லாரென் பாவெல், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து லாரென், சாமி தரிசனம் செய்தார்.
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடம் களைகட்ட தொடங்கியுள்ளது.
அதில் மிகவும் புகழ்பெற்றது கும்பமேளாவே பிரயாக்ராஜில் நடைபெறும் . அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக இந்து மக்களால் கருதப்படுகிறது.மேலும் 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். எனவே கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள் என சொல்லப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இத்தகைய மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல செல்போன் ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடைய மனைவி லாரென் பாவெல் கும்பமேளாவை ஒட்டி இந்தியா வந்துள்ளார்.இந்நிலையில், லாரென் பாவெல், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து லாரென், சாமி தரிசனம் செய்தார். லாரென் பாவெல் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.