ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி?
Top Tamil News January 12, 2025 07:48 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் மறைவிற்கு பின் இந்த தொகுதியில் 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். தற்போது அவரது மறைவால் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். இது தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானமும் நிறைவேற்றி இருந்தனர். இந்நிலையில் கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக போட்டியிடுகிறது.  காங்கிரஸ் வசம் இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி, கூட்டணியில் திமுக.விற்கு  ஒதுக்கப்பட்டாலும், மன வருத்தம் ஏதும் இன்றி திமுக வேட்பாளரின் வெற்றிக்கு சிறப்பாக பாடுபடுவோம் என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக போட்டியில்லை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அமைச்சர்களும் திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்பதாலும் பணபலம் படை பலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிட உள்ளதாக தகவல வெளியாகியுள்ளது. இன்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்த பின் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.