சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!
சென்னையில் 48வது புத்தக கண்காட்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்றுடன் இந்த புத்தகக் காட்சி நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்கிய சென்னை புத்தக கண்காட்சியில் 900 அரங்கங்கள் அமைக்கப்பட்டது என்பதும், தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்து ரூபாய் நுழைவு கட்டணமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை நாட்களில் 11 மணி முதல் 8:30 மணி, வார நாட்களில் இரண்டு மணி முதல் 8:30 மணி வரை நடைபெற்றது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva