திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நிலையைப் பற்றி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் யானை காந்திமதி. இந்த யானைக்கு 56 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது. இந்த யானைக்கு வயது முதிர்வு ஏற்பட்டதால் மூட்டு வலி காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை வழங்கி வந்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களாக யானை நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென யானை கீழே படுத்த நிலையில் பின்னர் எழுந்திருக்க முடியவில்லை. அந்த யானையை பாகன்கள் சேர்ந்து எழுந்து நிற்க வைக்கும் முயற்சி செய்த நிலையில் பலனளிக்காததால் இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவ குழுவினர் பார்வையிட்ட நிலையில் நேற்று பெரிய கிரேன்கள் மூலமாக யானையை தூக்கி நிறுத்தினர். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அந்த யானை கீழே விழுந்தது. இதைத்தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. மேலும் தற்போது காந்திமதி யானை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.