தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக தி கோட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படம் பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பகவந்த் கேசரி திரைப்படத்தை நடிகர் விஜய் 5 முறை பார்த்ததாக நடிகர் விடிவி கணேஷ் சங்கராந்தி வஸ்துண்ணம் என்ற தெலுங்கு திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
அதாவது அந்த படம் மிகவும் பிடித்துப் போனதால் அதன் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டு அந்த படத்தின் இயக்குனர் அணில் ரவுபிடியிடம் விஜய் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாக ஆதங்கப்பட்டார். இதனை இயக்குனர் அணில் ரவுபுடியும் ஒப்புக்கொண்ட நிலையில் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் என்றார். அவர் விடிவி கணேசிடம் இது பற்றி பேச வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். அதோடு விஜயை ஒரு நல்ல மனிதர் என்று அவர் புகழ்ந்த நிலையில் தளபதி 69 திரைப்படம் ரீமேக் திரைப்படமா? இல்லையா என்பதை அவர்களே அறிவிப்பார்கள் என்றும் கூறினார். மேலும் இதன் காரணமாக தற்போது தளபதி 69 திரைப்படம் அந்தப் படத்தின் ரீமேக் படமாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.