பாலிவுட் முன்னணி நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் ஜனவரி மாதம் பத்தாம் தேதி தனது 51வயது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவரது பிறந்தநாள் அன்று அவரது காதலி சபா ஆசாத்துடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு சபா ஆசாத் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ட்ரண்ட் ஆகி வருகிறது. நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், நடிகை சுசானா கான் என்பவரை கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இளம் நடிகையான சபா ஆசாத்தை சமீப காலமாக காதலித்து வந்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் தனது இளம் காதலியான சபா ஆசாத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சபா ஆசாத் வெளியிட்டு காதலர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் குறித்து நெட்டிசன்கள் பலரும் 51 வயதில் 39 வயதான இளம் நடிகையுடன் காதலில் விழுந்து உள்ளதை விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram