டும் டும் டும்… காதலியை கரம்பிடித்தார் தெருக்குரல் அறிவு… இசைஞானி இளையராஜா, திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து..!!
SeithiSolai Tamil January 12, 2025 06:48 AM

தமிழ் சினிமாவில் முன்னணி ராப் பாடகர்களில் ஒருவராக திகழ்பவர் தெருக்குரல் அறிவு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் மூலமாக மிகவும் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு, மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கோல்டன் ஸ்பேரோ ஆகிய பாடல்கள் இவருக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியான கல்பனாவை இன்று திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.