பகலில் தூங்கினால் நம் உடலில் என்ன நேரும் தெரியுமா ?
Top Tamil News January 12, 2025 09:48 AM

பொதுவாக  எடை குறைக்க நினைப்போர் சாப்பிடுவது சப்பாத்தியாக இருந்தாலும் ,இல்லை சாதமாக இருந்தாலும் சரி அதனுடன் இருபங்கு காய்கறிகள் எடுத்து கொள்ள வேண்டும் .உடல் எடை குறைக்க என்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் நாம் அறியலாம்

 1.உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், தாங்கள் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன; அந்த உணவு ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.  2.இதன் மூலம் அதிக கலோரிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்

3.எடை இழப்புக்கு முயற்சி செய்கையில், சிலர் சரியான அளவு புரத சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அவர்கள் முயற்சி வீணாகி விடும்.


4.ஏனெனில் புரதம் பசியை குறைக்க உதவுகிறது. எடை இழப்பின் போது, தசைகளையும் தளராமல் பாதுகாக்கிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுவது அவசியம்.

5.புதிதாக ஒருவர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார் என்றால், முதலில் எளிதான பயிற்சிகளை செய்து, பின்ன மெதுமெதுவாக நேரத்தையும், பயிற்சியையும் அதிகரிக்க வேண்டும்.
6.உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், தேவைக்கு அதிகமாக செய்யக் கூடாது என்பதில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
7.பகலில் வெகுநேரம் வரை தூங்கினால், அது உங்கள் எடை குறைப்பு முயற்சிகள் வீணாக வழிவகுக்கும். எனவே தூங்கி எழும் நேரத்தை முடிவு செய்யுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.