இன்று காலை 'ஸ்பேஸ் டாக்கிங்' மூலம் 2 செயற்கைகோள்கள் இணைப்பு... இஸ்ரோ அசத்தல்!
Dinamaalai January 12, 2025 12:48 PM

இன்று காலை ‘ஸ்பேஸ் டாக்கிங்’ மூலம் 500 மீட்டர் தொலைவில் 2 செயற்கைகோள்களை இணைக்கிறது இஸ்ரோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ), விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறை மூலம் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் இதுவரை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.


400 கிலோ எடை கொண்ட 2 செயற்கை கோள்களை விண்ணில் 700 கிமீ தொலைவில் நிலை நிறுத்தும் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 2 செயற்கைகோள்களும் 20 கிமீ தொலைவில் வெவ்வேறு திசைகளில் நிலை நிறுத்தபட்டுள்ளன. அதன் பிறகு இரண்டையும்  இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.

இந்த இணைப்பு நடவடிக்கையானது கடந்த ஜனவரி 9ம் தேதி  நடைபெறும் என இஸ்ரோ அறிவித்து இருந்த நிலையில், ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இந்த செயல்முறை தள்ளிவைக்கப்பட்டது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.


தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், 1.5 கி.மீ இடைவெளியில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனவும், மீண்டும் இன்று ஜனவரி 12ம் தேதி காலை 500 மீ தொலைவில் இந்த செயற்கைகோள் இணைப்பு நடவடிக்கை தொடரும் எனவும் இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.