ரிசர்வ் வங்கிகளின் புதிய வட்டி விகித விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வங்கிகளும் வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட வாரிய கொள்கையின்படி கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிலையான விகிதத்திற்கு மாறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும். அதன்படி ரிசர்வ் வங்கியின் விதியின்படி, கடன் வழங்குபவர்கள் தனிநபர் தவணை முறையில் ஆன கடன் வகைகளில் நிலையான வட்டி விகிதத்தை கட்டாயமாக வேண்டும்.
இந்த வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கும் போது கடனாளிகள் தங்கள் வாரியம் அங்கீகரித்த கொள்கையின்படி நிலையான விகிதத்திற்கு ஏற்ப மாறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இதன்படி சமமான மாதாந்திர தவணை தனிநபர் கடன்கள் உயரும் வட்டி விகித சுழற்சியில் கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதத்திற்கு மாறுவது.
மேலும் EMI மேம்படுத்துதல் அல்லது EMIகளின் எண்ணிக்கை நீட்டித்தல், EMI மாற்றாமல் வைத்திருத்தல் அல்லது தவணை காலத்தின் போது எந்த நேரத்திலும் செலுத்துதல் அல்லது முழுமையாக முன்கூட்டியே செலுத்துதல் ஆகியன அடங்கும். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, வாடிக்கையாளர்கள் நிலையான விகிதக் கடனுக்கு தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் நெகிழ்வுத் தன்மையை அனுமதிப்பதாகும். இதற்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் கடன் வழங்குபவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் காட்டப்படும்.