பொதுவாக இரத்தத்தில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளை உண்டாக்கும். உணவு வழியாக யூரிக் அமிலத்தை குறைக்கலாம் . எந்த மாதிரியான உணவுகள் உங்களுக்கு உதவும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
1.யூரிக் அமிலத்தை குறைப்பதில் எலுமிச்சை ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும்.
2.எலுமிச்சை ஜூஸை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.
3.எலுமிச்சையில் யூரிக் அமிலத்தை கரைக்கும் சிட்ரிக் அமிலம் உள்ளது.
4.எலுமிச்சை தவிர, வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், கொய்யா மற்றும் ஆரஞ்சு போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
5.பொதுவாக யூரிக் அமிலம் உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
6.ஓட்ஸ், ஜவ்வரிசி, பாஜ்ரா, வாழைப்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
7.ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளும் யூரிக் அமிலத்தைக் குறைக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் செர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவற்றில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.