மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ஒரு தனியார் பள்ளியில் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடந்த நிலையில் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பெண் டிஐஜி சவிதா சோகானே அறிவுரை வழங்கினார். அப்போது அவர் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக பேசிய நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, நீங்கள் தான் நான்காவது புதிய தலைமுறையை கொண்டு வரப் போகிறீர்கள் என்பதால் அதற்காக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
நீங்கள் நான் சொல்வதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பௌர்ணமி அன்று மட்டும் கர்ப்பமாகி விடக்கூடாது. அதிகாலை நேரத்தில் எழுந்து சூரிய உதயம் ஆவதற்கு முன்பாக தண்ணீர் குடித்து நமஸ்காரம் செய்தால் அறிவான குழந்தைகள் பிறக்கும். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக விளக்கம் கொடுத்த டிஐஜி பௌர்ணமி ஒரு புனிதமான நாள் என்பதால் தான் அப்படி பேசியதாக கூறினார். நம்முடைய வேதங்கள் மற்றும் இந்து மதத்தின் மீது உள்ள ஈர்ப்பினால் தான் அப்படி பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும் இதோ அந்த வீடியோ,