ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 05-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிருகிறார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் இன்று சந்தித்துள்ளார்.
மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சண்முகம் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், டி.ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.