மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில்,தனித்துப் போட்டியிட போவதாக உத்தவ் தாக்கரே அறிவிப்பு..!
Seithipunal Tamil January 12, 2025 08:48 AM

மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், ஜில்லா பரிஷத்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நடைபெறும் நகராட்சித் தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக சிவசேனாவின் உத்தவ் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பு மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணிக்கு மிக பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணியின் ஒரு கூட்டம் கூட நடக்கவில்லை என சஞ்சய் ராவத் எம்.பி. ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தலைநகர் மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டால் அது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நாங்கள் எங்கள் பலத்தின் அடிப்படை போட்டியிடுவோம். மகாராஷ்டிராவில் உள்ள இண்டியா கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரைக் கூட அவர்களால் நியமிக்க முடியவில்லை. இது நல்லதல்ல. கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாக கூட்டத்தைக் கூட்டுவது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.