உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் டாப் 10 பட்டியல்; இந்தியா எந்த இடம்..?
Seithipunal Tamil January 12, 2025 08:48 AM

2025ம் ஆண்டின், உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், இந்தியா ஐந்தாவது இடத்திலேயே தொடர்கிறது.

 ஐ.எம்.எப்., வெளியிட்ட தகவல்களிலின் படி, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்தி அதன் பொருளாதார அளவு மதிப்பிடப்படுகிறது. ஜிடிபியின் அடிப்படையில் உலகின் முதல் பத்து நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டின் கடைசி 03 மாதங்களில், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனை விட வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 06-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 05-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நடப்பாண்டும் 4.27 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி., வளர்ச்சி உடன் 05ம் இடத்திலேயே இந்தியா தொடர்கிறது.

சர்வதேச செலாவணி நிதியம் ( ஐ.எம்.எப்., ) தரவுகளின் படி, உலகின்டாப் 10 பொருளாதார நாடுகள்:

1.அமெரிக்கா- 30.34 டிரில்லியன் டாலர்.
2.சீனா- 19.53 டிரில்லியன் டாலர்
3. ஜெர்மனி- 4.92 டிரில்லியன் டாலர்
4. ஜப்பான்- 4.39 டிரில்லியன் டாலர்
5. இந்தியா- 4.27 டிரில்லியன் டாலர்
6. யுனைடெட் கிங்டம்- 3.73 டிரில்லியன் டாலர்
7.பிரான்ஸ்- 3.28 டிரில்லியன் டாலர்
8.இத்தாலி- 2.46 டிரில்லியன் டாலர்
9.கனடா- 2.33 டிரில்லியன் டாலர்
10. பிரேசில்- 2.31 டிரில்லியன் டாலர்
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.