இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை.. நாய் குரைத்ததால் வந்த வினை.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!
Dinamaalai January 12, 2025 01:48 AM

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியில் வசித்து வருபவர் முத்துகிருஷ்ணன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் பகுதி செயலாளர். இந்நிலையில், நெய் கிருஷ்ணன் என்ற நபர் நேற்று இரவு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, முத்துகிருஷ்ணன் வளர்க்கும் நாய் நெய் கிருஷ்ணனை நோக்கி குரைத்தது.

இதனால் நெய் கிருஷ்ணனுக்கும் முத்துகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இருவரும் கோபமடைந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த முத்துகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்த கொள்ளிடம் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.