திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம்.. விதவைப் பெண்ணை ஏமாற்றிய திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
Dinamaalai January 12, 2025 01:48 AM

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சாயர்புரம் நகர் திமுகவின் செயலாளர் கண்ணன். இவர் NVK டிரேடர்ஸ் என்ற பெயரில் ஒரு கடை மற்றும் இ-சேவை மையத்தை நடத்தி வருகிறார். சாயர்புரம் நடுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 34 வயது விதவை ஒருவர் இவரது கடையில் பணிபுரிகிறார்.

கணவர் 2019 ஆம் ஆண்டு இறந்ததிலிருந்து தனது குழந்தையுடன் பெற்றோரின் பராமரிப்பில் வசித்து வந்த அந்தப் பெண்ணுடன் கண்ணன் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும், கண்ணன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில், திடீரென உறவில் இருந்து விலகிய கண்ணன், சில நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியுள்ளனர். மேலும், கண்ணன் அந்தப் பெண்ணை ரூ.3 லட்சம் வாங்கிக் கொண்டு போலீசில் புகார் அளிக்காமல்  சென்று விடு என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் பாதிக்கப்பட்ட பெண் நேரில் சென்று புகார் அளித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், திமுக நிர்வாகி கண்ணன் மீது ஏமாற்றுதல், திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபடுதல்,   மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.