எத்தனை தடைகள் வந்தாலும் படிக்கற்களாக மாற்றி வெற்றி பெறுவோம் என திருவள்ளுவர் விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடுவதமாக திமுக வர்த்தக அணி சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் திருவள்ளுவர் சிலை அமைத்து பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திமுக வரதகரணி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பாண்டி செல்வம் தலைமையில் வண்ணாரப்பேட்டை கல்மண்டபம் சந்திப்பு அருகில் திருவள்ளுவர் சிலை அமைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து திருக்குறள் புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம பேசிய ஆர்.எஸ்.பாரதி, “ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார். அவர் தமிழகத்தில் வியாபாரம் செய்ய வந்துள்ளார், வியாபாரம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆன்மீகத்தை வைத்து எத்தனை தடை கற்கள் போட்டாலும் படிக்கற்களாக மாற்றி திமுக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.