புதுச்சேரி காலாப்பட்டு தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி மீது தாக்குதல் நடத்திய 4 பேரை கைது செய்த காலாபட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்த 4 பேர், மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மாணவி சத்தம் போட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஓடினர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாணவர் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளதுடன், காலாப்பட்டு காவல்நிலையத்திலும் புகார் அளித்தது. இதையடுத்து காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைதல், ஆபாசமாக திட்டுதல் போன்ற செயல்களுக்காக பிரிவு296(பி), 329(3), ஆர்/டபிள்யூ 3(5), பிஎன்எஸ் ஆகிய பிரிவுகளில் அடையாளம் தெரியாத 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.