கடந்த 3 ஆம் தேதி, தென் கொரியாவில் அதிபர் யூன் சுக்-யோல் திடீரென அவசரகால நிலையை அறிவித்தார். இதற்கு பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கினர். அதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குள் அவசரகால நிலையை அவர் நீக்கினார். இருப்பினும், யூன் சுக்-யோல் அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கோரி போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, யூன் சுக்-யோல் அதிபர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், தேசத்துரோக குற்றச்சாட்டில் தென் கொரிய நீதிமன்றம் யூன் சுக்-யோலுக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து, புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைது செய்யச் சென்றனர். அந்த நேரத்தில், யூன் சுக்-யோலின் ஆதரவாளர்கள் அவரைக் கைது செய்யவிடாமல் தடுத்தனர். இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை யூன் சுக்-யோலின் இல்லத்திற்குச் சென்றனர். இதை அறிந்ததும், அவரது ஆதரவாளர்கள் வீட்டின் முன் கூடினர்.
அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. யூன் சுக்-யோலைக் கைது செய்யும் முயற்சியை அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இயோலின் வழக்கறிஞர்கள் விசாரணை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக யூன் சுக் இயோல் கூறினார்.
இந்நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு, அவர் இன்று கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்படுவதற்கு முன்பு யூன் சுக்-யியோல் வெளியிட்ட காணொளியில், "விசாரணையின் சட்டப்பூர்வத்தன்மையை நான் ஏற்கவில்லை. ஆனால் இரத்தக்களரியைத் தடுக்க விசாரணைக்கு இணங்குவேன். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சரிந்துவிட்டது" என்று கூறினார். தற்போதைய வாரண்டின் கீழ் அவரை 48 மணி நேரம் வரை காவலில் வைக்க முடியும். அவரது காவலை நீட்டிக்க அதிகாரிகள் புதிய வாரண்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
!
.