நாக்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, நாக்பூரில் மருத்துவமனை மற்றும் பயிற்சி கல்லூரியை நடத்தி வரும் 47 வயது உளவியலாளர் ஒருவர், ஆலோசனை என்ற பெயரில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பயிற்சி அளிப்பதாகக் கூறி மிரட்டி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் குறைந்தது 50 சிறுமிகளையாவது பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பயிற்சிக்காக வந்த சிறுமிகளை கவர்ச்சியாக ஏதாவது சொல்ல வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு, அதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மிரட்டியுள்ளார்.
தற்போது, அவரால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் துணிச்சலாக புகார் அளித்ததை அடுத்து, உளவியலாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டு, சம்பவம் பகிரங்கமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
!
.