பேருந்து மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி!
Dinamaalai January 16, 2025 01:48 AM

அரசு பேருந்து மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவி சின்னபனகமுட்லு கிராமத்தில் வசித்து வருபவர்  சங்கர். இவரது மகன் சரத்குமார். அதே கிராமத்தில் வசித்து வந்த  அண்ணாமலையின்  மகன் ஹரிஷ் மற்றும் நடேசன் என்பவரது மகன் நாகன். இவர்கள் மூவரும் ஊத்தங்கரையில் உள்ள சரத்குமாரின் உறவினர் ஒருவரது துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். மீண்டும் சின்னபனமுட்லு கிராமத்திற்கு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றுக் கொண்டிருந்த போது  ஜெகதேவி பேருந்து நிலையம் அருகே பின்னால் வேகமாக வந்த அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற  கிருஷ்ணகிரி எஸ்.பி.தங்கதுரை மற்றும் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் இருவரும் தீவிர  விசாரணை மேற்கொண்டனர். ஒரே கிராமத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

!

 .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.