`தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே `இந்தியா' கூட்டணி' - கைவிரித்த சரத் பவார்
Vikatan January 15, 2025 07:48 PM

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூறிக்கொண்டிருக்கிறது. அதோடு மகாவிகாஷ் அகாடி கலைக்கப்பட்டுவிட்டதாக உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அவர் தான் அப்படி சொல்லவில்லை என்று கூறிவிட்டார். அக்கட்சியின் கருத்துக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேயும் ஆதரவு கொடுத்துள்ளார். மகாவிகாஷ் அகாடியில் சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்), காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

உத்தவ் தாக்கரே

இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல்களை சுட்டிக்காட்டி பேசிய சுப்ரியா, உள்ளாட்சி அமைப்புகளில் தங்களது கட்சியும் தனித்தே போட்டியிடும் என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து காங்கிரஸ் தனது வருத்ததத்தை தெரிவித்திருந்தது. இப்பிரச்னை குறித்து தேசியவாத காங்கிாஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் கூறுகையில், ``இந்தியா கூட்டணி தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். ஒரு போதும் மாநில அளவில் அல்லது உள்ளாட்சி மட்டத்திலான தேர்தல் குறித்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும்''என்றார். டெல்லி தேர்தல் குறித்து கேட்டதற்கு, ``அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.