எருமை மாடுகளுக்கும் பொங்கல் கொண்டாடுவோம் - புரட்சி செய்த திராவிடர் கழகத்தினர்!
Seithipunal Tamil January 16, 2025 09:48 AM

அரியலூரில் திராவிடர் கழகத்தினர் மாட்டுப் பொங்கலை எருமை மாடுகளுக்கு சிறப்பு செய்து கொண்டாடியுள்ளனர். 

மாட்டுப் பொங்கலின் போது பசு மற்றும் காளை மாடுகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதாகும், எருமை மாடுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள், இதை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “எருமை மாடுகளை ஒதுக்கும் செயல் வர்ணபேதமாகும். மக்கள் பயன்பாட்டுக்கான அனைத்து மாடுகளையும் ஒரே மரியாதையில் கருத வேண்டும்,” என வலியுறுத்தினார். 

அதன்படி, இன்று அரியலூரில் நடைபெற்ற இந்நிகழ்வின் மூலம் அனைத்து மாடுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டி  மாட்டுப் பொங்கலை எருமை மாடுகளுக்கு சிறப்பு செய்து கொண்டாடியுள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.