இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம்!
Seithipunal Tamil January 16, 2025 09:48 AM

2024ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் தேர்வாகவில்லை என்று, மெட்டா (முகநூல்,இன்ஸ்டா) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்க்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரால் மன்னிப்பு கோரியுள்ளார். 

அவர் வெளியிட்ட பதிவில், “இந்த தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்கிறோம். இந்தியா மெட்டாவுக்கு மிக முக்கியமான நாடாகும், அதன் எதிர்கால வளர்ச்சியின் மையமாக இருக்க விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜோ ரோகன் பாட்காஸ்டில் பேசும்போது ஜுக்கர்பெர்க், “2024 தேர்தல்களில் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் வெற்றி பெறவில்லை,” என கூறினார். 

இதற்கு பதிலளித்த அஷ்வினி வைஷ்ணவ், “இந்திய மக்கள் 2024 தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியை மீண்டும் தேர்ந்தெடுத்தனர்,” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், மெட்டா நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வலியுறுத்திய நிலையில், மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரால் மன்னிப்பு கோரியுள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.