கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரி கொட்டகை பகுதியில் விவசாயியான நாகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் நாகன், சரத்குமார், ஹரிஷ் ஆகியோர் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஜெகதேவி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கடலூரில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நாதன், ஹரிஷ், சரத்குமார் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.