அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்தோணி கான் லான் (வயது 53) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் ஆர்வம்கொண்ட அந்தோணி, இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக களமிறங்க பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார்.
ஆன்லைனில் பெயரை பதிவு செய்து, உடல் தகுதி தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால், மாடுபிடி வீரர்களுக்கான வயது வரம்பான 40 வயதைத் தாண்டியிருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் பெரும் கண்கலங்கிய அந்தோணி அழுததைக் கண்ட பிற மாடுபிடி வீரர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, ஜல்லிக்கட்டு போட்டியை முழுமையாகக் கண்டுகளித்த வழிவகை செய்தனர்.