பிரபல தயாரிப்பாளர் டி.எம்.ஜெயமுருகன் காலமானார்..!
Newstm Tamil January 18, 2025 02:48 PM

நடிகர் முரளி நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ரோஜா மலரே என்கிற படத்தை எடுத்தார் ஜெயமுருகன் . இந்த படத்தில் முரளிக்கு ஜோடியாக ரீவா நடித்திருந்தார். மேலும் அருண் பாண்டியன், ஆனந்த் பாபு, செந்தில், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து, ஜெயா ஆகாஷ் நடிப்பில் வெளியான அடடா என்ன அழகு, கார்த்திக் நடிப்பில் வெளியான தீ இவன், போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கு இசையமைத்தவரும் இவரே. இவர் இயக்கிய சில படங்களில் நடித்தும் உள்ளார்.

தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையாளராக இருக்கும் ஜெயமுருகன் அவருடைய சொந்த ஊரான திருப்பூரில் வசித்து வரும் நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவரது இறுதிச் சடங்கு, திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.