பெரம்பலூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; காவலர் சஸ்பெண்ட், எஸ்ஐ உட்பட 4 அதிகாரிகள் ட்ரான்ஸ்பர்.!
Tamilspark Tamil January 19, 2025 06:48 PM


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர், காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 32). இதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 30). இருவரும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்கள். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சமீபத்தில் வாக்குவாதமும் நடந்துள்ளது.

இதனால் தேவேந்திரன் மீது மணிகண்டன் புகார் கொடுக்க கைகளத்தூர் காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு சமாதான பேச்சுவார்த்தைக்கு பேசப்பட்டு, மணிகண்டனை அழைத்துக்கொண்டு காவலர் பிரபு, நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் அருணின் வயலுக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:

இளைஞர் வெட்டிக்கொலை

அங்கு தேவேந்திரன் மணிகண்டன் புகார் கொடுக்கச் சென்ற செய்தி அறிந்து ஆத்திரத்தில் இருந்த நிலையில், மணிகண்டனை பார்த்ததும் ஆவேசமடைந்த தேவேந்திரன், மணிகண்டனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவத்தில் மணிகண்டன் உயிரிழந்துவிட, தேவேந்திரன் கைது செய்யப்பட்டார்.

மணிகண்டனின் மறைவால் ஆத்திரமடைந்த உறவினர்கள், காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் திருச்சி சரக டிஐஜி வருண்குமார், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல் நிலையத்தில் வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தாமல், தனியாக அழைத்துச் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்திய தலைமை காவலர் ஸ்ரீதருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும், கைகளத்தூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.